இந்தியா

நாடு முழுவதும் 29 சட்டப்பேரவை, 3 மக்களவை தொகுதிகள் இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம்

நாடு முழுவதும் 29 சட்டப்பேரவை, 3 மக்களவை தொகுதிகள் இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம்

Veeramani

நாடெங்கும் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 3 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சிகளே முன்னிலை வகித்து வருகின்றன.

14 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதோடு மத்தியப் பிரதேசத்தின் கண்ட்வா, இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மற்றும் தத்ரா நகர் ஹவேலி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 3 இடங்களில் ஒன்றில் ஆளும் பாஜக முன்னணியில் உள்ளது. ராஜஸ்தானில் தேர்தல் நடந்த 2 இடங்களில் ஒன்றில் ஆளும் காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ளது. மேற்கு வங்காளத்தில் 4 இடங்களிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது.

பீகாரில் தேர்தல் நடந்த 2 தொகுதிகளில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒன்றில் முன்னணியில் உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடந்த 2 இடங்களில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன. இமாசலப் பிரதேச மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் காங்கிரசும், மத்தியப்பிரதேச மாநிலம் கண்ட்வா தொகுதியில் பாஜகவும் முன்னிலையில் உள்ளன.