ஆப்பிள் ஆப் ஸ்டோர் குறித்து ஆலோசனை பெற உலகம் முழுவதிலும் இருந்து முக்கியமானவர்களுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இதில் லூத்ராவும் ஒருவர்.
டெல்லியை சேர்ந்த இவான் சிங் லூத்ரா 12 வயதாக இருக்கும் போது தனது தந்தையின் கால் சென்டரில் கம்ப்யூட்டர் கோடிங் கற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து 15 வயதுக்குள் மொபைல் ஆப், வெப்சைட் போன்றவற்றை சொந்தமாக உருவாக்கி விற்பனை செய்யத் துவங்கினார். இவான் சிங் லூத்ராவின் ஆப்களைப் லட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்த துவங்கினர்.
இதன்மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸின் தொடர்பு லூத்ராவுக்கு கிடைத்தது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் குறித்து ஆலோசனை பெற உலகம் முழுவதிலும் இருந்து முக்கியமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இதில் லூத்ராவும் ஒருவர் ஆவார்.
தான் உருவாக்கிய 30 மொபைல் ஆப்களையும், பல மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் 27 வயதில் மில்லியனர் ஆகியுள்ளார் இவான் சிங் லூத்ரா. தற்போது 300க்கும் அதிகமான நிறுவனத்தை உருவாக்கி, முதலீடு செய்து உள்ளார். தனது 30 வயதில் பில்லியனர் என்ற நிலையை அடைவேன் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் இவான் சிங் லூத்ரா.
இதையும் படிக்க: 'உலகெங்கும் ஆறுகளில் மருத்துவக் கழிவுகளின் நச்சுத்தன்மை'- சர்வதேச ஆய்வு முடிவுகள்