இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 10 ஐஐடி கல்வி நிறுவனங்களில் பயின்ற 27 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதில், சென்னை ஐஐடியில்தான் மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் சென்னை ஐஐடியில் பயின்ற 7 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, கரக்பூர் ஐஐடியில் 5 மாணவர்களும், டெல்லி, ஹைதராபாத் ஐஐடிக்களில் தலா 3 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஐஐடியில் பயின்ற மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.