ஷேர் ஆட்டோக்களில்தான் அதிகபட்சம் ஓட்டுநர் உட்பட 10 முதல் 12 பேர் பயணிப்பது வழக்கம். ஆனால், சாதாரண ஆட்டோவில் கிட்டத்தட்ட 27 பேர் பயணித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
அதன்படி, உத்தர பிரதேசத்தின் ஃபதேப்பூர் பகுதியில் உள்ள பிந்த்கி கொட்வாலி அருகே ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்ததை அறிந்த போலீசார் அதனை மடக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
அப்போது, ஆட்டோவில் இருந்தவர்களை இறங்கும்படி போலீசார் கூறியதும் நண்டு சிண்டு முதல் ஒருவர் பின் ஒருவராக ஓட்டுநர் இல்லாமல் 26 பேர் இறங்கியதை கண்டதும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இதனையடுத்தும், விசாரிக்கப்பட்டதில் பக்ரீத் தொழுகையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பும் போது அதிக பாரத்தை ஏற்றி, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வேகமாக வந்ததற்காக ஆட்டோவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியிருக்கிறது.
ALSO READ: