உத்தரப் பிரதேசம் முகநூல்
இந்தியா

உ.பி| கர்ப்ப காலத்தில் உருவான முடியை உண்ணும் விநோத பழக்கம்! பெண்ணின் வயிற்றில் இருந்த 2.5 கிலோ முடி!

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது பிரசவ காலத்தின் போது , தலை முடியை உண்ணும் பழக்கத்திற்கு ஆளாகிய நிலையில், அப்பெண்ணின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சையின் மூலம் 2.5 கிலோ எடைக்கொண்ட தலை முடி அகற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 25 வயது நிரம்பிய பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதி அடைந்துள்ளதார். மேலும், எந்த உணவுகளையும் உண்ண முடியாமல், தொடர்ந்து வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனால், பெண்ணின் குடும்பத்தினர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று சோதனை செய்துள்ளனர். பின்னர் வயிற்று வலியை சரிசெய்ய மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உடலில் முன்னேற்றம் தென்படவில்லை. இந்நிலையில்,  சித்ரகூடில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிக்கு இப்பெண்னை அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர்.அங்குதான், இப்பெண்ணின் வயிற்றுவலிக்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தவகையில், இப்பெண் தனது பிரசவ காலத்தில் தலையை முடியை உண்ணும் விநோத பழக்கத்திற்கு ஆளாகி இருந்ததும், தனது தலை முடி மட்டுமல்லாது, மற்றவர்களின் உதிர்ந்த தலை முடியையும் அதிகமாக உண்பார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், குழந்தை பிறப்பிற்கு பிறகு தலை முடியை உண்பதை நிறுத்திய இப்பெண் தற்போது வயிற்று வலியால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.இதுமட்டுமல்லாது, இவர் பிரசவ காலத்தில் உண்ட இத்தலைமுடி அவரின் வயிறு முழுவதும் தலைமுடியால் நிரம்பி, அது முடி கட்டியாக மாறி இருந்ததையும் அறிந்து கொண்டனர்.

இந்நிலையில்,இப்பெண்னை சோதித்த மருத்துவர் நிர்மலா, மேலும் இது குறித்து மருத்துவர் தெரிவிக்கையில், ”இவர் தலைமுடி உண்ணும் ட்ரைக்கோபேஜியா (Trichophagia) என்ற அரியவகை மருத்துவ நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் தலை முடியை சாப்பிடுவது, உறிஞ்சுவது அல்லது மென்று சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இது ஊட்டச்சத்து குறைபாடு, செரிமான அமைப்பில் அடைப்புகள் மற்றும் மரணம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.”என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், அப்பெணினின் வயிற்றில் இருந்த 2.5 கிலோ எடையுள்ள முடி கொத்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு கேட்பதற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுவதாக இருந்தாலும்,இதனால், அப்பெண் இறந்திருக்கலாம் என்று மருத்துவர் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.