இந்தியா

கேரளாவில் வெள்ளத்தால் குவிந்த 2434 டன் குப்பை..!

webteam

நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது. மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள். கடுமையான இழப்பிற்க்கு பிறகு பல போராட்டங்களை கடந்து கரைசேர்ந்திருக்கும் கேரளாவில் அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகி உள்ளது.

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ப்ளாஸ்டிக், மெத்தைகள், தலையணைகள், துணிகள் மற்றும் எலட்க்ட்ரானிக் பொருட்கள் மட்டும் 2434 டன் குப்பைகளாக சேர்ந்துள்ளது. கேரள அரசின் கீழ் செயல்படும் தி க்ளீன் கேரளா நிறுவனம் ஆழப்புழா, பதனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், வயநாடு ஆகிய பகுதிகளில் இருந்த குப்பைகளை சேகரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் அதிகமாக 1033 டன் குப்பைகளை சேமித்ததாக அந்நிறுவனத்தின் துனை மேலாலர் ஸ்ரீஜித் கூறியுள்ளார்.

எலக்ட்ரானிக் குப்பைகளை சேகரிக்கும் பணியில் “ஹரிதா கேரளம் மிஷன்” நிறுவனம் ஈடுபட்டது. அதில் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், தொலைக்காட்சி, மிக்ஸி உள்ளிட்ட எலக்ட்ரானிக் குப்பைகளை சேகரித்து, மறுசுழச்சிக்காக ஹைதராபாத் தளமாக செயல்படும் நிறுவனத்திற்க்கு அனுப்பபட்டது.

மேலும் எர்ணாகுளம் பகுதிகளில் மட்டும் ஒரு டன் அளவிற்கு எலக்ட்ரானிக் குப்பைகளை சேகரிக்கப்பட்டதாக கூறுகின்றனர். 

குப்பைகளை அகற்றும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட அதிகாரி திலீப்குமார் “பதனம்திட்டா பகுதிகளில் மட்டும் 650 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன, மொத்தமாக 2000 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் சேர்ந்துள்ளது. மேலும் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு மாடி அளவுக்கு நீர் புகுந்துள்ளதால், அந்த வீடுகளில் இருந்து பொருட்கள் அனைத்தும்  தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த குப்பைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தகவல்கள் : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.