இந்தியா

‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் ?

‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் ?

webteam

தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர். 

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கவுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெற்றதாக புகார் அளிக்கவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போதிய பாதுபாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக‌ தெரிகிறது. கொல்கத்தா வன்முறை சம்பவத்தில் பாரதிய ஜனதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நாடு முழுவதும் நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைமுறையில் ஏராளமான சிக்கல்கள் இருப்பதால், அதை உரிய முறையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி வெற்றிபெறுவது ஆயிரம் சதவீதம் உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.