மிசோரம் ட்விட்டர்
இந்தியா

மிசோரம்|கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழப்பு.. மழையால் மீட்புப் பணி பாதிப்பு

மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரெமல் புயலாக வலுபெற்று மேற்குவங்கத்தில் கடந்த 26-ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடந்தது. இதனால் மேற்கு வங்கம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. மேலும், மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வடகிழக்கு மாவட்டங்களில் தற்போதுவரை கனமழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், மக்கள் பாதுகாப்பாக வெளியேற்ற்ப்பட்டு வருகின்றனர். மேலும், பல மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த இரண்டு நாட்களுக்கு அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க: ஒடிசா| மேடையில் பேசும் நவீன் பட்நாயக்.. நடுங்கும் கையை மறைக்கும் விகே பாண்டியன்.. வைரலாகும் வீடியோ!