ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் உயிரிழந்தனர். உயிரிந்தோரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள பெர்ரி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 38 பேர் கிருஷ்ணா நதியில் படகு பயணம் சென்றனர். பவித்ரா சங்கமம் என்ற இடம் நோக்கி அவர்கள் படகு சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென படகு கவிழ்ந்ததில் அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். இதை கரையில் இருந்த கண்ட மீனவர்கள் சிலர் ஆற்றில் குதித்து 15 பேரை மீட்டனர். 21 பேர் பலியாயினர். மற்றவர்களை தேடும் பணி நடந்துவருகிறது. படகில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றதாலும் உரிய பாதுகாப்பு கவசம் வழங்காததும் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.