இந்தியா

60 அடி ஆழத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு

60 அடி ஆழத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு

webteam

மத்திய பிரதேசத்தில் பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த மினி லாரி ஆற்று படுகைக்குள் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தை சேர்ந்த 45 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மினி லாரியில் சென்றுக்கொண்டிருந்தனர். வாகனம் சித்தி மாவட்டத்தில் உள்ள சோன் நதி பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய வாகனம் 60 அடி ஆழ ஆற்று படுகைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி்ழந்தனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.