இந்தியா

வரும் ஜூலை மாதம் பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை 

webteam

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயிலில் வரும் 4ஆம் தேதி முதல் ரத யாத்திரை நடைபெறவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்தாண்டும் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜெகன்நாத் ரத யாத்திரைக்கா‌ன ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரு‌கின்றது. 

ஜூலை 4ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறும் இந்த ரத யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  ரத யாத்திரையில் வடம்பிடித்து இழுக்கும் தேர்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக  நடைபெற்று வருகின்றது. தேர்கள் தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மரத்தினால் ஆன தேர்களில், சிற்பங்கள் செதுக்குதல், வண்ணங்கள் தீட்டுதல் ஆகிய ‌கலைநயமிக்க பணிகளை கலைஞர்கள் செய்து வருகின்றனர்.

மற்ற ஊர் தேர்களை போல் அல்லாமல் பூரியில் மட்டும் தான் ஆண்டுதோறும் ரத யாத்திரைக்கான தேர்கள் செய்யப்பட்டு ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதற்காக ஒடிசா மாநில வனத்துறையினர் மரங்களை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரத யாத்திரையையொட்டி பூரி நகரில் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏரளமான போலீசார் ஈடுபடுத்தபடவுள்ளனர்.