இந்தியா

2019 நாடாளுமன்றத் தேர்தல் கருத்து கணிப்பு - தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி

2019 நாடாளுமன்றத் தேர்தல் கருத்து கணிப்பு - தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி

webteam

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றத்தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டைம்ஸ் நவ் பத்திரிகையும்
விஎம்.ஆரும் இணைந்து நாடாளுமன்றத்தேர்தல் குறித்து கருத்து கணிப்பு நடத்தினர். இதற்காக 54.70 சதவிகித ஆண்களும் 45.30 சதவிகித பெண்களும்
மாதிரிகளாக தேர்தெடுக்கப்பட்டு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் கிடைத்த தீர்வுகள் மாநிலங்கள் வாரியாக பின்வருமாறு:

மஹாராஷ்டிரா ( 48 இடங்கள்) : தேசிய ஜனநாயகக் கூட்டணி 43, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 5, மற்றவை 0

மேற்குவங்காளம் (42 இடங்கள்) : திரிணாமுல் காங்கிரஸ் 32, தேசிய ஜனநாயகக் கூட்டணி 9, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1

பீகார் (40 இடங்கள்) : தேசிய ஜனநாயகக் கூட்டணி 25, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 15

தமிழ்நாடு (39 இடங்கள்) : ஐக்கிய முற்போக்கு கூட்டணி 35, அதிமுக 4, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மற்றவை 0

கர்நாடகா (28 இடங்கள்) : தேசிய ஜனநாயக கூட்டணியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தலா 14 இடங்களையும் கைப்பற்றும்.

குஜராத் (26 இடங்கள்) : தேசிய ஜனநாயக கூட்டணி 24, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2

ஆந்திரப் பிரதேசம் (25 இடங்கள்) : ஒய்.எஸ்.ஆர்.சிபி 23, டிடிபி 2, 

கேரளா (20 இடங்கள்) : ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி 16, இடது ஜனநாயக முன்னணி கட்சி 3, மற்றவை 1

தெலுங்கானா (17 இடங்கள்) - தெலுங்கான ராஷ்டிரிய சமிதி 10, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 5, தேசிய ஜனநாயக கூட்டணியும் மற்றவையும் தலா 1, 

ஒடிசா (21 இடங்கள்) : தேசிய ஜனநாயக கூட்டணி அதிகப்படியான இடங்களை பெறும். பிஜூ ஜனதா தளம் 8, மற்றவை 0

ஜார்கண்ட் (14 இடங்கள்) : ஐக்கிய முற்போக்கு கூட்டணி 8, தேசிய ஜனநாயக கூட்டணி 6, மற்றவை 0

உத்திரப் பிரதேசம் (80 இடங்கள்) : பகுஜன் சாமாஜ் கூட்டணி 51, தேசிய ஜனநாயகக் கூட்டணி 27, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2, மற்றவை 0 என
கணித்துள்ளனர்.

அஸ்ஸாம் (14 இடங்கள்) : ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3, தேசிய ஜனநாயக கூட்டணி 8, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி 2, மற்றவை 1

அருணாச்சல பிரதேசம் (2 இடங்கள்) : தேசிய முற்போக்கு கூட்டணி 2

மணிப்பூர் (2 இடங்கள்) : ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தலா ஒரு இடங்களை பெறும்

திரிபுரா ( 2 இடங்கள் ) : தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டு இடங்களையும் கைப்பற்றும்

கோவா (2 இடங்கள்) : ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தலா ஒரு இடங்களை பெறும்.

நாகலாந்து (1 இடம்) : தேசிய ஜனநாயக கூட்டணி 1

மிசோரம் (1 இடம்) : தேசிய ஜனநாயக கூட்டணி 1

மேகாலயா  (1 இடம்) : தேசிய ஜனநாயக கூட்டணி 1.

சிக்கிம்  (1 இடம்) : மற்றவை 1. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 0