இந்தியா

விரைவில் மக்கள் புழக்கத்திற்கு வருகிறது 200 ரூபாய் நோட்டு

விரைவில் மக்கள் புழக்கத்திற்கு வருகிறது 200 ரூபாய் நோட்டு

Rasus

புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் ஆலோசித்து முடிவு எடுத்தது. அதன்படி, புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்கு வர இருக்கின்றன. இந்தியாவில் தற்போது தான் முதல்முறையாக புதிய 200 ரூபாய் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. மேலும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இந்நிலையில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளிவர உள்ளது.