Gujarat Heavy Rainfall Twitter
இந்தியா

குஜராத் : 30 மணி நேரமாக 200 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவான கனமழை! 2 நாட்களில் 9 பேர் உயிரிழப்பு!

PT WEB

குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 30 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டியதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

குஜராத் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜூனாகத், ஜாம்நகர், மோர்பி, கட்ச், சூரத் மற்றும் தபி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை 37 தாலுக்காக்களில் 100 மில்லி மீட்டருக்கு மேலாக மழை பதிவாகியிருப்பதாக அம்மாநில பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக வயாரா தாலுக்காவில் 299 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. சுவர் இடிந்து விழுந்தது உள்ளிட்டம், மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காந்திநகர், கேதா, அகமதாபாத், வதோதரா, பரூச், சூரத், நவ்சாரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.