இந்தியா

பந்திப்பூர் காட்டுத்தீ விவகாரம் : 2 பேர் கைது

பந்திப்பூர் காட்டுத்தீ விவகாரம் : 2 பேர் கைது

webteam

பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீக்கு காரணமான இரண்டு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுகியில் கடந்த சில நாள்களாகவே காட்டுத் தீ கட்டுகடங்காமல் பற்றி எரிந்து வருகிறது. தமிழகத்தில் முதுமலை வன சரணாலயித்தில் கடந்த வாரம் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ, தற்காலிகமாக அடங்கிய நிலையில். இப்போது, கர்நாடக மாநிலத்தின் எல்லையில் இருக்கும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பெரும் காட்டுதீ இயற்கையை நாசம் செய்து வருகிறது. 

பந்திப்பூருக்கு காட்டுதீ புதியதல்ல என்றாலும் இம்முறை 10 ஆயிரம் ஹெக்டரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து 25 தீ தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

2014 ஆம் ஆண்டு  எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இங்கே 400-க்கும் அதிகமான புலிகள் இருப்பதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான யானைகள் இந்த வனப் பகுதியில்தான் காணப்படுகின்றன.

இந்நிலையில், பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீக்கு காரணமான இரண்டு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து வன அதிகாரி ஒருவர் கூறுகையில், “காட்டுத்தீக்கு காரணமான இரண்டு பேரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். புலிகள் தங்கள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுக்க அவர்கள் ஒரு தீவை எரித்துள்ளனர்” எனத் தெரிவித்தார். 

இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் இருந்து இருவரும் ஓடுவதை வன அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது.