இந்தியா

பாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண்

பாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண்

webteam

கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்த இரு பாதிரியார்கள் இன்று திருவல்லா கீழ் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கேரளாவில் மலங்கரை சிரியன் ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் ஒன்றில் பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண் ஒருவரை பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக சோனி வர்க்கீஸ், ஜெய்ஸ் கே.ஜார்ஜ் உள்பட 4 பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டு பாதிரியார்கள் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், சோனி வர்க்கஸ் மற்றும் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். 

இந்த மனுக்கள் தள்ளுபடியான நிலையில் இருவரும் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இதை ரத்து செய்த உச்சநீதிமன்றம் இருவரும் சரணடைய உத்தரவிட்டது. இதையடுத்து சோனி வர்க்கீஸ் மற்றும் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோர் திருவல்லா கீழ் நீதிமன்றத்தில் இன்று சரண்டைந்தனர்.