இந்தியா

இந்தியாவில் காற்று மாசால் ஓராண்டில் 25 லட்சம் பேர் உயிரிழப்பு

இந்தியாவில் காற்று மாசால் ஓராண்டில் 25 லட்சம் பேர் உயிரிழப்பு

webteam

உலகிலேயே சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

லான்செட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலகம் முழுவதும் 2015 ஆம் ஆண்டில் காற்று மாசு தொடர்பான நோய்களுக்கு 90 லட்சம் பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் ஓராண்டில் நிகழ்ந்த மரணங்களில் 16 சதவிகிதம் ஆகும். இந்தியாவில் 2015ல் உயிரிழந்தவர்களில் 25 சதவிகிதம் பேர் காற்று மாசு தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 25 லட்சம் பேர் காற்று மாசு தொடர்பான நோய்களுக்கு பலியான நிலையில், மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனாவில் உயிரிழப்பு 16 லட்சமாக இருந்தது.