புனே முகநூல்
இந்தியா

மதுபோதையில் 2 உயிர்களை பறித்த சிறுவன்!’300 வார்தையில் கட்டுரை எழுதவும்’என ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

புனேவில் 17 வயது மைனர் சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தநிலையில், அச்சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியுள்ள சம்பவம் பெரும் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

புனேவில் 17 வயது மைனர் சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தநிலையில், அச்சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியுள்ள சம்பவம் பெரும் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில், கல்யாண் நகர் பகுதியில் 19 ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) அதிகாலை அன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில், 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர், மதுபோதையில் அதிவேகமாக Porsche என்ற கார் இயக்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்தநிலையில், காரின் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் அனிஸ் துனியா, அஸ்வினி கோஸ்டா என தம்பதியின் மீது மோதியுள்ளது. இந்தவிபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த தம்பதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே அந்த சிறுவனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனயடுத்து, போலீஸில் ஒப்படைத்த நிலையில், சம்பந்தபட்ட சிறுவன், அவரின் தந்தை, அவருக்கு மதுபானம்வழங்கிய பார் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு சில நிபந்தனைகளுடன் அச்சிறுவனுக்கு 15 மணி நேரத்திலேயே ஜாமீன் வழங்கியுள்ளார்.

நீதிபதி கொடுத்த நிபந்தனைகள் என்னவென்றால்,”ஏர்வாடா போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் போக்குவரத்து பணியாற்ற வேண்டும், சாலை விபத்தின் விளைவுகள் மற்றும் அதற்கான விளைவுகள் என்ற தலைப்பில் 300 வார்த்தையில் கட்டுரை எழுத வேண்டும். குடிப்பழக்கத்தை கைவிட மனநல ஆலோசனையுடன் கூடிய சிகிச்சை அளிக்க வேண்டும்.” என்பதுதான்.

இந்தவகையில், இரு உயிரிகளை பரித்த பிறகும் வெறும் 300 வார்த்தைகளின் கட்டுரை எழுதுவது எந்த வகையில் தண்டையாக அமையும் என்று பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி போலீஸார் தெரிவிக்கையில், ”சிறுவன் தான் 12 ஆ வகுப்பில் தேர்ச்சியடைந்ததால் தனது நண்பர்களுடன் பார்டிக்கு செய்துள்ளான். இதனால்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர் குறுகிய பாதையில் 200 கிமீ வேகத்தில் தன் நண்பர்களுடன் கார் ஓட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மகராஷ்டிராவை பொறுத்தவரை சட்டப்படி ஒருவர் மது அருந்துவதற்கான வயது 25 . ஆனால், இந்த சிறுவனின் வயது 17.” என்று தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மத்தியப் பிரதேசத்தில் பிரபல ரியல் எஸ்டேட் குடும்பத்தை சேர்ந்தவர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவதள்ளது. இந்நிலையில், 17 வயது சிறுவனின் தந்தையை பூனே போலீஸார் கைது செய்துள்ளனர்.