ஆன்லை கேம் முகநூல்
இந்தியா

கேம் கொடுத்த டாஸ்க்.. JUMP என்ற சொல்! 14 ஆவது மாடியிலிருந்து குதித்த சிறுவன்! அதிரவைக்கும் பின்னணி!

புனேவில், ஆன்லைன் கேமிற்கு அடிமையான 16 வயது சிறுவன் அந்த கேம்மின் டாஸ்கை செய்து முடிப்பதற்காக தனது வீட்டின் 14 ஆம் தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆன்லைன் கேமிற்கு அடிமையான 16 வயது சிறுவன் அந்த கேம்மின் டாஸ்கை செய்து முடிப்பதற்காக தனது வீட்டின் 14 ஆம் தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், வெகு நாட்களாக ஆன்லைன் கேம் விளையாடுவதில் மிகவும் நாட்டம் கொண்டுள்ளார்.

இந்தநாட்டம், நாள் ஆக ஆக, ஆன்லைன் விளையாட்டின் மீது கொண்ட அடிக்சனாக மாறியாதாகவும், அவரின் செயல்களின் ஒரு சில விசித்திர மாற்றங்கள் தென்பட்டதாகவும் சிறுவனின் பெற்றோரே தெரிவிக்கின்றனர். இதன்படி, சம்பவ தினத்தனமான கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணி அளவில் , சிறுவன் தனது வீட்டின் 14 ஆவது தளத்தின் பால்கனியிலிருந்து கீழே குதித்து மரணம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இவரின் அறையை நன்கு சோதனையிட்டுள்ளனர். இந்தநிலையில், அவரது அறையிலிருந்து இரண்டு ஓவியங்கள் மற்றும் குறிப்பு ஒன்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர். அந்த ஓவியத்தில், அவரது அறை மற்றும் அவர் தங்கியிருக்கும் வீட்டின் கட்டிடம் ஆகியவை ஓவியமாக்கப் பட்டிருந்தது. மேலும், அந்த ஓவியத்தில் பால்கனி வரைந்திருந்த இடத்தில் ஜம்ப் என்று எழுதப்பட்டிப்பதை கண்ட போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்..

இதனையடுத்து, இவரது தாயார் மற்றும் தந்தையிடத்தில் விசாரணை மேற்கொண்ட போது இவர் குறித்த ஒரு சில தகவல்களை தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் தாய் தெரிவிக்கையில், “முன்பு அவன், பால்கனிக்கு செல்லவே பயப்படுவான். இவன் ஆன்லைன் கேம் விளையாட ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே இவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. விளையாட வேண்டாம் என்று நான் லேப் டாப்பை இவனிடமிருந்து பறித்து சென்றால், என்னிடத்தில் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்துவான். எங்களை பொறுத்தவரை இவன் விளையாடிய விளையாட்டில் மாடியிலியிருந்து குதிக்க சொல்லி எதாவது டாஸ்க் கொடுத்திருப்பார்கள்..இதனால்தான் எதையும் யோசிக்காமல் இந்த முடிவை அவன் எடுத்திருக்கிறான்.” என்று தெரிவித்தார்.

சிறுவனின் தந்தை தெரிவிக்கையில், “எனது மகன் படிப்பில் கெட்டிக்காரன். சில நாட்களுக்கு முன்பு கூட அவரது ஆசிரியடத்திலிருந்து பாராட்டை பெற்றார். நாங்கள் அவரது அறையிலிருந்து இரண்டு ஓவியங்களை எடுத்தோம். அதில், இவன் இரண்டு அணிகளில் விளையாடுவது போல வரையப்பட்டிருந்தது. இவன் லாப் டாப்பை படிப்பதற்காகதான் உபயோகித்தான் என நினைத்தோம். ஆனால் விளையாடுவதற்கு உபயோகித்தான் என்று தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

சிறுவனின் தாய்

இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி, “ சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் இவர் ஆன்லை கேம்மிற்கு அடிமையாகியிருந்தாக கூறுகிறார்கள். நாங்கள் இவரது லேப் டாப் ஐ கையகப்படுத்தியுள்ளோம். ஆனால், பாஸ்வேடு என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

சிறுவன் இறந்ததை கூட சிறுவனின் பெற்றோர்கள் அவர்களது சொசைட்டி வாட்ஸ் அப் குரூப்பில் பலர் இடுக்கைகளை இட்டதின் மூலம்தான் அறிந்து கொண்டுள்ளனர்.

மெசேஜை பார்த்த சிறுவனின் தாய், தனது மகன் அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று சந்தேகித்து சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் கதவு திறக்கப்படவில்லை. மற்றொரு சாவியை வைத்து அறையை திறந்து பார்த்தபோதுதான்.. மகன் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதுள்ளார்.

இது குறித்து உளவியலாளர் தெரிவிக்கையில் சோனாலி காலே தெரிவிக்கையில், " 10 வயது இருக்கும் குழந்தைகள் தொலைபேசிகள் அல்லது மடிக்கணினிகளில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும், திரை நேரம் தொடர்பாக சில விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பயன்படுத்தும் செல்போன் மற்றும் லேப்டாப்களில் உண்டாக்குங்கள். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே திறந்த தொடர்பு மிகவும் முக்கியமானது. அர்ப்பணிப்புள்ள பெற்றோர்-குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிடுங்கள். அப்போதுதான், அவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.குழந்தை தவறு செய்தாலும் பகிர்ந்து கொள்ளும் சூழல் அமைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மனநல மருத்துவர் டாக்டர் சாகர் முண்டாடா கூறுகையில், “நிராகரிப்பது (அ) 'இல்லை என்று எப்பொழுது தெரிவிக்கவேண்டும் என்ற முக்கியத்துவத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கவில்லை. குழந்தை பருவமடையும் போது, ​​டீனேஜில் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை தருவதை விட, 3-4 வயதிலிருந்தே இதை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ”என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.