இந்தியா

மாநிலங்கள் கையிருப்பில் சுமார் 16 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

மாநிலங்கள் கையிருப்பில் சுமார் 16 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

Veeramani

மாநிலங்கள் வசம் சுமார் 16 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க, அந்தப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 108 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும்படி மருந்து தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அந்நிறுவனங்களிடமிருந்து 75 விழுக்காடு தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கி வருகிறது. அதன்படி மாநில அரசுகள் வசம் தற்போது 15 கோடியே 55 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.