அசாம் முகநூல்
இந்தியா

அசாம் | வெள்ளப்பெருக்கால் உயிரிழந்து வரும் அரியவகை உயிரினங்கள்!

அசாமில் வெள்ளப்பெருக்கால் அரியவகை ஒற்றை கொம்பு காண்டாமிருகம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

PT WEB

அசாமில் பெய்து வரும் கனமழையால் முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதாகவும், சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில அரசு கூறியுள்ளது.

245 நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, காசிரங்கா தேசிய பூங்காவில் வசித்த 108 மான்கள், 9 ஒற்றை கொம்பு காண்டாமிருகம், நீர்நாய் என 150 விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும், 99 விலங்குகள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பூங்காவில் உள்ள முகாம்களில் 70 வன முகாம்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், அங்கிருந்த மருந்து, பொருட்கள் அடித்து செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதற்கிடையில் மழை குறைந்து தண்ணீர் வடியத் தொடங்கி இருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.