இந்தியா

மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது

மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது

webteam

பள்ளியை கட் அடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய மாணவியை கடத்தி 4 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள நெமவார் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி உமா (பெயர் மாற் றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். கடந்த 16-ம் தேதி காலை 8 மணிக்கு ஸ்கூலுக்குச் சென்றார். வழக் கமாக மாலையில் வீட்டுக்கு வரும் அன்று வரவில்லை. அவரது பெற்றோர்கள், பள்ளியிலும் தோழிகளிடமும் விசாரித்தனர். பள்ளியை கட் அடித்துவிட்டு சென்றது தெரிந்தது. ஆனால் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. 

இதனால் கவலை அடைந்த குடும்பம் நெமவார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று, அவர் வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது திடுக் தகவலைச் சொன்னார். அதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த 16-ம் தேதி பள்ளியை கட் அடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார் உமா. பஸ்சில் ஏறினார். அதில் வேறு பயணி கள் இல்லை. இதைப் பயன்படுத்திக்கொண்ட பஸ்சின் நடத்துநர், உமாவை அங்கு வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். பின்னர் ஒரு இடத்தில் இறக்கிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். 

அப்போது அந்த வழியாக பைக்கில் இரண்டு பேர் வந்தனர். ‘வண்டியில் ஏறு, வீட்டில் விட்டுவிடுகிறோம்’ என்று கூறினர். அவர் மறுத்தார். வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றி தங்கள் கிராமத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு அறையில் பூட்டி வைத்து  நான்கு நாட்களாக மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் விட்டுவிட்டனர். 

உமா அழுதுகொண்டே வீட்டுக்குத் திரும்பினார். அப்போது இன்னொருவர் பைக்கில் வந்தார். அவரும் ’வண்டியில் ஏறு, வீட்டி ல் விடுகிறேன்’ என்று கூறியிருக்கிறார். மறுத்த உமா, பின்னர் ஏறிக்கொண்டார். ஆனால் அந்த ’நல்லவரு’ம் மறைவான ஒரு இடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார், உமாவை! இந்த தகவல்களை போலீசாரிடம் கூறிய உமா, குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். 

இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். உமாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.