இந்தியா

கர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

கர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

webteam

கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இன்று இணைந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில், இந்த 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல இவர்கள் அனைவரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் பாஜகவில் இணைய உள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேற்றுத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இரண்டு பேர் இன்னும் இணையவில்லை. பாஜகவில் இணைந்துள்ள அனைவரும் இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.