இந்தியா

திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர்

திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர்

webteam

திருப்பதியில் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு பொது முடக்கம் என சித்தூர் ஆட்சியர் நாராயண பரத் குப்தா தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இன்று முதல் ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு பொதுமுடக்கத்தை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காலை 6 மணி முதல் பிற்பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கலாம் எனவும் பிற்பகல் 11 மணிக்கு மேல் மக்கள் வெளியில் நடமாடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்திற்கான டிக்கெட் விநியோகத்தை தேவஸ்தானம் நிறுத்தியுள்ளது. ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. திருப்பதியில் கோயிலில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் என பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாள்தோறும் 6 ஆயிரம் பொது தரிசனம் டிக்கெட்டுகளும், ஆன்லைனில் 6 ஆயிரம் டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.