கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சுதந்திர தினத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களில் வீரசவர்க்கார் மற்றும் திப்பு சுல்தான் படங்களை வைப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
75 ஆவது சுதந்திர வருடம் முடிந்து 76 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியில் வன்முறை ஏற்பட்டு 144 தடை உத்தரவு அமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சுதந்திர தினத்துக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட சவர்க்கார் மற்றும் திப்பு சுல்தான் படங்களை வைப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக மாறியது. அந்த வன்முறையில் இருவருக்கு கத்தி குத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்து
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்ற போதும் போராட்டத்துக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் போலீசார் தடியடி நடத்தி தண்ணீர் பிச்சியடித்து போராட்டக்காரர்களை கலைந்து போக வைத்தனர்.
இந்த கலவரம் குறித்து மேலும் வன்முறை சம்பவம் நிகழ வாய்ப்புள்ளதால், அந்த பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.