இந்தியா

பெடல் போடாமல் செல்லும் சைக்கிள்... 14 வயது பெண்ணின் கண்டுபிடிப்பு...!

பெடல் போடாமல் செல்லும் சைக்கிள்... 14 வயது பெண்ணின் கண்டுபிடிப்பு...!

webteam

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 14 வயது பெண் எந்தவொரு எரிபொருள் இல்லாமலும், பெடல் போடாமலும் இயங்கும் சைக்கிளை கண்டுபிடித்துள்ளார்.

ஒடிசாவை சேர்ந்த 14 வயதான பெண் தேஜஸ்வினி. இவர் எரிபொருள் இன்றி இயங்ககூடிய ‘ஏர் பைக்’ ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இது 1 மணி நேரத்திற்கு 60 கிமீ தூரம் பயணிக்கக்கூடிய திறன் உடையது. காற்று துப்பாக்கிகள் இயங்ககூடிய முறையை பயன்படுத்தி இந்த சைக்கிளை கண்டுபிடித்ததாக தேஜஸ்வினி கூறியுள்ளார்.

10 கிலோ எடை கொண்ட சிலிண்டரில் காற்று நிரப்பப்பட்டு சைக்கிளின் பின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த பெடலும் போடாமல் சைக்கிள் இயங்கும் என தேஜஸ்வினி தெரிவித்துள்ளார். பல தோல்விகளை கடந்து தன் தந்தையின் ஊக்கத்தினால் இதை கண்டுபிடித்துள்ளதாக அவர் கூறினார். இது முற்றிலும் காற்று மூலம் இயங்குவதால், பெட்ரோல் அல்லது டீசல் போன்ற எந்த எரிபொருளும் தேவையில்லை என தேஜஸ்வினி கூறுகிறார்.