உத்தரப்பிரதேச மாநிலம் முகநூல்
இந்தியா

உ.பி|கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பட்டியலினப் பெண்! பணம் கொடுத்து மறைக்கமுயன்ற கொடூரம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 வயதுடைய பட்டியலினச் சிறுமியை இரண்டு உயர் சாதி ஆண்கள் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி , அதை பணம் கொடுத்து மறைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 வயதுடைய பட்டியலினச் சிறுமியை இரண்டு உயர் சாதி ஆண்கள் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி , அதை பணம் கொடுத்து மறைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அக்டோபர் 5 ஆம் தேதி , உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுமியின் தாய், தனது மகனின் பள்ளி பையில் பணம் இருப்பதை கண்டுள்ளார். எப்படி, பணம் வந்தது? என்று தனது மகளிடம் தாய் விசாரிக்கவே ..திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சிறுமியின் கூற்றுப்படி, இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு உயர் சாதி ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியில் தெரிவிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று மிரட்டி 100 ரூபாயை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு பணம் கொடுத்து வந்த இவர்கள், தொடர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், அக்டோபர் 8 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. இதனையடுத்து, எஸ்ச்/எஸ்டி உள்ளிட்ட சட்டத்தின் கீழ் சம்பந்த குற்றவாளிகள் மீது பிஎன் எஸ் பிரிவு 70(2), கீழ் வழக்குப்பதிவுச் செய்து கைது செய்துள்ளனர்.

தற்போது, இது குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குற்றத்தை செய்த நரேஷ் சிங் மற்றும் ஹர்விந்திர குமார் ஆகிய இருவரும், ஓட்டுநர்கள் என்றும், சிறுமி வசிக்கும் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள் என்றும் விசாரணை தெரியவந்துள்ளது..

மேலும், சிறுமிக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டநிலையில், உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பே நோய்வாய்ப்பட்டு இறந்தநிலையில், தினசரி கூலித் தொழிலாளியாக அவரது தாய் பணிப்புரிந்து இவரை வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.