தேசிய புலனாய்வு முகமை முகநூல்
இந்தியா

பயங்கரவாத சதி செயல் புகாரில் 13 பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை

பயங்கரவாத சதி செயல் புகாரில் 13 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

PT WEB

பயங்கரவாத சதி செயல் புகாரில் 13 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. நாடெங்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட மத அடிப்படைவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா அமைப்புகளின் சித்தாந்தத்தை அடியொற்றி செயல்பட்டு வருவதாகவும் வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரே நேரத்தில் 44 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரே கருத்தியல் கொண்ட இளைஞர்களை தங்கள் அமைப்புகளில் சேர்த்து நாடெங்கும் மத வன்முறைகளை தூண்ட பயங்கரவாத அமைப்பு முனைந்து வருவதாக குற்றஞ்சாட்டும் தேசிய புலனாய்வு முகமை இது தொடர்பாக சோதனைகளை நடத்தி பலரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.