மகாராஷ்ட்ரா மாநிலத்தில், ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித் துள்ளது. 58 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் துலே என்ற இடத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொழிற்சாலையை சுற்றிலும் கரும் புகையாக காணப்படுகிறது. தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்து வருகின்றனர்.
இந்த விபத்தில் 8 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டது. இப்போது 12 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. 58 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.