இந்தியா

மீண்டும் கைகொடுத்த ஏர்இந்தியா.. கப்பலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக தாயகம் வருகை..!

மீண்டும் கைகொடுத்த ஏர்இந்தியா.. கப்பலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக தாயகம் வருகை..!

webteam

கொரோனா தொற்று காரணமாக ஜப்பானில் நிறுத்திவைக்கப்பட்ட ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் இருந்த இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர்.

சீனா சென்றுவிட்டு ஜப்பான் நோக்கி சென்றுகொண்டிருந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ எனும் கப்பல் கொரோனா அச்சம் காரணமாக யோகோஹாமா துறைமுகத்தில் அப்படியே நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் கப்பலில் உள்ள 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் செய்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

டெல்லி வன்முறை: உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு

இதனிடையே கப்பலில் இருந்த தமிழகத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் வாட்ஸ்அப் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கப்பலில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை செய்கிறோம் என்றும் அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். மேலும் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறோம் என்றும் தங்களை இந்தியா கொண்டு வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் ஜப்பானில், கப்பலில் சிக்கியிருந்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானம் தற்போது டெல்லி வந்தடைந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து‌ள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டினர் டோக்கியாவில் இருந்து பத்திரமாக இந்தியா வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.