இந்தியா

மலைப் பகுதிகளுக்கு தனி அமைச்சகம் - 10 மாநிலங்கள் வலியுறுத்தல்

மலைப் பகுதிகளுக்கு தனி அமைச்சகம் - 10 மாநிலங்கள் வலியுறுத்தல்

webteam

மலைப் பகுதிகள் அதிகம் கொண்ட 10 மாநிலங்கள் சார்பில் மத்திய அரசில் தனி அமைச்சகம் உருவாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இமயமலைப் பகுதி மாநிலங்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில் இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர், மேகாலயா முதல்வர் சங்மா, நாகாலாந்து முதல்வர் நிபியு ரியோ, நிதிக் கமிஷன் தலைவர் என்.கே.சிங், நிதி ஆயோக் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மணிப்பூர், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மிசோரம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர். முசோரியில் நடந்த மாநாட்டின் இறுதியில், இமயமலைப் பகுதியை ஒட்டியுள்ள 10 மாநிலங்களின் நலனுக்காக மத்திய அரசில் தனி அமைச்சகம் உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மலைப் பகுதி மாநிலங்களின் பசுமையைக் காப்பது, சுற்றுலாவை மேம்படுத்துவது, போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பது ஆகியவற்றில் இந்த அமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.