இந்தியா

சர்க்கரை இறக்குமதிக்கு 10 சதவீத வரி உயர்வு

webteam

கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நலனை கருத்தில் கொண்டு இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதால், தற்போது சர்க்கரை மீதான இறக்குமதி வரி 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

சர்க்கரை மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 40 சதவிகிதமாக இருந்த சர்க்கரை இறக்குமதி வரி 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நலனை கருத்தில் கொண்டு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வருவாய்த் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.