இந்தியா

ரயில்களில் 10% கட்டண தள்ளுபடி?

ரயில்களில் 10% கட்டண தள்ளுபடி?

Rasus

ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் அட்டவணை தயாரான பின் காலியாக இருக்கும் இடங்களை பதிவு செய்பவர்களுக்கு கட்டண தள்ளுபடி வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில்கள் புறப்படும் நேரங்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டு அல்லது காலியாக உள்ள இடங்களை நிரப்ப கட்டண தள்ளுபடி வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரயிலில் பயணம் செய்ய உள்ள பயணிகளின் அட்டவணை தயாரான பின்பு, காலியாக உள்ள இடங்களை பதிவு செய்பவர்களுக்கு 10 சதவிகித கட்டண தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டுகளை ரயில்வே கவுண்டர்கள் அல்லது ஆன்லைன் மூலமாக கூட பதிவு செய்ய முடியும். ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக இந்த டிக்கெட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.

கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி முதல் சோதனை முறையில் ராஜ்தானி, சகாப்தி, துரோந்தோ உள்ளிட்ட ரயில்களில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களிலும் இந்த முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.