டெல்லியில் ஒரே குடும்பத்தில் 11 பேர் மர்மான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல விநோத தடயங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி தரையில் சடலமாகவும் கிடந்தார். அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். இதனால் இது கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் வீட்டில் போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது வீட்டிற்குள்ளேயே கோவிலை கட்டி அவர்கள் வழிபாடு நடத்தியது தெரியவந்துள்ளது. வழிபாட்டு முறையும் வித்தியாசமாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். எனவே மூட நம்பிக்கையால் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிடைத்த சில தகவல்கள் போலீசாருக்குமே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
1. சம்பவ இடத்திலில் இருந்து கைப்பட எழுதிய நோட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட 9 செல்போன்கள் சைலன்ட் மோடில் அங்குள்ள டிராவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
2. வீட்டின் சுவரில் 11 குழாய்கள் நீட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் அவை தண்ணீர் வருவதற்கான குழாய்கள் இல்லை.
3. வீட்டின் பிரதான கதவில் மொத்தமாக 11 இரும்புக் கம்பிகள் இருந்துள்ளன.
4. வீட்டின் பிரதான கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது.
5. இறப்பதற்கு முன் குடும்பத்தினர் 20 சப்பாத்திகளை ஆர்டர் செய்துள்ளனர்.
6. உயிரிழந்த 11 பேரின் கண்கள் கட்டப்படிருந்தன. காதுகள் பஞ்சால் அடைக்கப்பட்டிருந்தன. வாய் ஒட்டப்பட்டிருந்தது. அதில் 9 பேரின் மூட்டுக்களும் கட்டப்பட்டிருந்தது.
7. உயிரிழந்த 11 பேரில் 9 பேர் சீலிங் பேனில் இரும்புக் கம்பியில்தொங்கிக் கொண்டிருந்தனர்.
8. வீட்டில் வழிபாடு நடத்தப்பட்ட இடத்தில் இரண்டு நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது.
9.வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் 2-வது தளத்தில் கட்டப்பட்டிருந்தது. நாயை போலீசார் கண்டபோது அது அதிக காய்ச்சலில் இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து மர்மமான பல தடயங்கள் கிடைப்பதால் அதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே போலீசார் கைப்பற்றிய குறிப்பில், “எப்படியும் கடைசி நேரத்தில் கடவுகள் எங்களை காப்பாற்றி விடுவார். எங்களுக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது” என எழுதியதாக தெரிகிறது. எனவே பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.