இந்தியா

தேர்வுதாள் கசிந்தால் 1 கோடி அபராதம்! 10 ஆண்டு சிறை ! குஜராத் அரசு கொண்டுவந்த புதிய மசோதா

தேர்வுதாள் கசிந்தால் 1 கோடி அபராதம்! 10 ஆண்டு சிறை ! குஜராத் அரசு கொண்டுவந்த புதிய மசோதா

webteam

குஜராத் மாநிலத்தில் தேர்வு தாள் கசிந்தால் 1 கோடி அபராதம்!! 10 ஆண்டு சிறை !! புதிய மசோதாவை அறிமுகம் செய்யவுள்ளது குஜராத் அரசு

"குஜராத் பொதுத்தேர்வு-2023" என்ற புதிய மசோதாவை குஜராத் அரசு தயார் செய்துள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் மாநிலத்தால் தயார் செய்யப்படக்கூடிய பல்வேறு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிவதை தடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வினாத்தாள் கசிந்தால் 1 கோடி ரூபாய் அபராதம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை உள்ளிட்டவை இந்த மசோதாக்கள் மூலம் விதிக்கப்படும் என தெரிகிறது. இந்த மசோதாவை வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறை, 1 லட்சம் அபராதம் உள்ளிட்டவை தண்டனையாக வழங்கப்படும். அதேபோல், மாணவர்கள் மீது தேர்வு முறைகேடு நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகளுக்கு எந்த ஒரு போதுத்தேர்விலும் பங்கேற்க தடை விதிக்கவும் மசோதா வழிவகுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.