கடந்த 10 ஆண்டுகளில் ரயில் திருட்டு தொடர்பாக ஒரு லட்சத்து 71 ஆயிரம் வழக்குகள் பதிவானதாக தெரிய வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பதிவாகும் புகார்கள் குறித்து கேட்கப்பட்டிருந்தது. அதன்படி ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட பதிலில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில் திருட்டு தொடர்பாக ஒரு லட்சத்து 71 ஆயிரம் வழக்குகள் பதிவானதாக தெரிய வந்துள்ளது.
2018ஆம் ஆண்டில் அதிகபட்சமாக ரயில் திருட்டு தொடர்பாக 36 ஆயிரத்து 584 புகார்கள் பதியப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிக அதிக அளவாகும். ரயில்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கொடுப்பது மாநில அரசுகள் வசமிருப்பதாகவும், குற்றத்தடுப்பு, வழக்குப்பதிவு, புலனாய்வு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகியவை மாநில அரசுகளிடமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை அமைக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.