நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வைரங்களுக்கு ஒன்றரை சதவிகித வரியும் மிகவும் அத்தியாவசியமான மருத்துவ காப்பீடுகளுக்கு 18 சதவிகித வரியும் விதிக்கப்படுவதாகவும் இதன்மூலம் பிரதமர் யார் நலனில் அக்கறை காட்டுகிறார் என்பது தெரியவருவதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதகமாகவும் பணக்காரர்களுக்கு சாதகமாகவும் உள்ள தற்போதைய ஜிஎஸ்டி வரி முறையை கைவிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். குறைவான அளவில் ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவது மூலமே ஏழை, நடுத்தர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.