இந்தியா

‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்?’ - ஜெகன் மோகன் காட்டம்

jagadeesh

ஆந்திராவில் அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி அறிமுகம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், அவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கில அறிவு அவசியம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஆங்கில வழி கல்வியை எதிர்ப்பவர்களின் குழந்தைகள் அனைவரும் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்? என்றும் கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் எந்தப் பள்ளியில் படித்தார், அவரது பேரக் குழந்தைகள் தற்போது எந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர் என அடுக்கடுக்காக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.