இந்தியா

“என்னை போட்டியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்” - பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி

“என்னை போட்டியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்” - பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி

webteam

பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் என்னிடம் கான்பூர் அல்லது வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் என்று மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு மக்களவை தேர்தலில் தற்போது வரை எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும் பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலும் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை.

கடந்தமுறை அத்வானி போட்டியிட்டு வெற்றி பெற்ற காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முரளி மனோகர் ஜோஷி. 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடிக்காக முரளி மனோகர் ஜோஷி வாரணாசி தொகுதியை விட்டுக்கொடுத்தார். அதன்பின் கான்பூரில் போட்டியிட்ட ஜோஷி 57 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் என்னை போட்டியிட வேண்டாம் என்று கூறிவிட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முரளி மனோகர் ஜோஷி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “ அன்புள்ள கான்பூர் மக்களே, பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் என்னிடம் கான்பூர் அல்லது வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.