வெளிநாடுகளில் ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல், நிதிஷ்குமார் தனது கூட்டணியை மாற்றியிருப்பதாக பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் விலகினார். தற்போது மெகா கூட்டணியில் இணைந்து அவர் முதலமைச்சர் ஆகியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கைலாஷ் விஜய் வர்கியா, “நான் வெளியூர் பயணம் செய்யும் போது, அங்குள்ள பெண்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் ஆண் நண்பர்களை (Boyfriend) மாற்றிக் கொள்வார்கள் என்று ஒருவர் கூறினார்.
பீகார் முதலமைச்சரும் அப்படித்தான், யாருடைய கையைப் பிடிக்கலாம் அல்லது வெளியேறுவார் என்று அவருக்கே தெரியாது. ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல், நிதிஷ் கூட்டணியை மாற்றிக்கொள்கிறார்” என்றார். இதற்கு பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
கைலாஷ் விஜய் வர்கியா, கடந்த ஜூன் மாதம் `அக்னிவீரர்களுக்கு, அவர்கள் பணிக்காலத்துக்குப் பின் கட்சி அலுவலகத்தில் பாதுகாவலர் பணி தருவோம்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கியிருந்தார். பின் தனது கருத்து திரித்து கூறப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.