இந்தியா

தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா ? - உச்ச நீதிமன்றம் அதிருப்தி

தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா ? - உச்ச நீதிமன்றம் அதிருப்தி

webteam

நாட்டில் என்ன நடக்கிறது? தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா? என உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் மூத்த போலீஸ் அதிகாரியாக இருந்த முகேஷ் குப்தா மீதான ஊழல் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முகேஷின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், மாநில அரசுக்கு எதிராக சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. 

நீதிபதி அருண் மிஸ்ரா கூறும்போது, “யாருக்குமே தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா? தினந்தோறும் ஏதேனும் நடந்துகொண்டே இருக்கிறது. நாட்டில் என்ன தான் நடக்கிறது. எந்த அடிப்படையில் ஒரு தனிநபரின் அலைபேசியை அவருக்கே தெரியாமல் ஒட்டு கேட்க அனுமதி தரப்பட்டது?”  என கேள்விகளை அடுக்கினார். மேலும், விரிவான விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய சத்தீஸ்கர் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். வாட்ஸ்ஆப் தகவல் திருட்டு சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறது.