இந்தியா

"ரயில் சேவையை ரத்து செய்யும் திட்டமில்லை" - ரயில்வே வாரியம் அறிவிப்பு!

"ரயில் சேவையை ரத்து செய்யும் திட்டமில்லை" - ரயில்வே வாரியம் அறிவிப்பு!

sharpana

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவையை ரத்து செய்யும் திட்டம் இல்லை என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல நகரங்களில் இரவு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் ரயில் மூலம் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் சேவை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே போர்டு தலைவர் சுனீத் சர்மா, எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவோ, அல்லது பாதியிலோ நிறுத்தப்படாது என்றார்.

(சுனீத் சர்மா)

கோடைக்காலம் நெருங்கியுள்ள நிலையில், பல கூடுதல் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுனீத் சர்மா கூறினார். ரயில் சேவைகளில் எவ்வித சிரமமும் இல்லை என்றும், தேவைப்பட்டால் கூடுதல் சேவைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, பல மாநிலங்களிலிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர் திரும்பியது குறிப்பிடத்தக்கது.