இந்தியா

“நிரவ் மோடி என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்” - லண்டன் நீதிமன்றத்தில் ஒளிபரப்பான வீடியோ

“நிரவ் மோடி என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்” - லண்டன் நீதிமன்றத்தில் ஒளிபரப்பான வீடியோ

webteam

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்ததாகத் தேடப்படும் வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வீடியோ ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று மோசடி செய்ததாக அவரை இந்திய சிபிஐ தேடி வருகின்றனர். நிரவ் மோடி தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் அவரை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஹாங்காங் மற்றும் துபாயின் நகை வியாபாரம் செய்து வரும் அஷிஷ் குமார் மோஹன்பாய் லாட் என்பவரின் வீடியோவை லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்தனர். 2018ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் பேசும் நகை வியாபாரி, “நிரவ் மோடி தனக்கு போன் செய்து என்னைத் திருட்டு வேலைகளில் ஈடுபடச் சொன்னார். இல்லையென்றால் கொன்றுவிடுவதாக மிரட்டினார்” எனத் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து நிரவ் மோடி பெயரில் போலியான நிறுவனம் தயார் செய்யப்பட்டு, அதற்குப் போலியான மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அந்த நகை வியாபாரி கூறியிருக்கிறார். இந்த வீடியோ லண்டன் நீதிமன்றத்தில் ஒளிபரப்பானது. மேலும் சில ஆதாரங்களும் நிரவ் மோடிக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்டுள்ளன.