இந்தியா

இந்திய தூதர் – தலிபான் பிரதிநிதி சந்திப்பு: அரசின் நிலையை தெளிவுபடுத்த ஓவைசி கோரிக்கை

இந்திய தூதர் – தலிபான் பிரதிநிதி சந்திப்பு: அரசின் நிலையை தெளிவுபடுத்த ஓவைசி கோரிக்கை

Veeramani

கத்தார் நாட்டுக்கான இந்தியத் தூதர் தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத் தலைவரை முதல் முறையான அரசாங்க ரீதியாக சந்தித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது. இது தொடர்பாக, தலிபான்கள் பற்றிய மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துமாறு அகில இந்தி மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய ஓவைசி, "இது தேசிய பாதுகாப்புக்குரிய விஷயம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அவர்களை ஒரு பயங்கரவாத அமைப்பாக பார்க்கிறதா இல்லையா என தலிபான்கள் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்என தெரிவித்திருக்கிறார்

கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல், தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாயை செவ்வாய்கிழமை சந்தித்தார். தலிபான் தரப்பின் வேண்டுகோளின் பேரில் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்தது என்று இந்திய வெளியுறவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் நாடு திரும்புவது குறித்து இருதரப்புக்கும் இடையே விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் பிரஜைகள் குறிப்பாக சிறுபான்மையினர், இந்தியாவிற்கு வருகை தர விரும்புவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.