அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் போன்ற பயங்கரவாத பிரச்னைகளுக்கு இந்தியர்கள் கடைபிடிக்கும் மாண்புகளே நிரந்தர தீர்வு தரும் என உலகம் தற்போது உணர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி காணொலி முறையில் பங்கேற்று பேசினார். செப்டம்பர் 11ஆம் தேதி உலகிற்கு பல விஷயங்களை உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் இதே நாளில்தான் நியூயார்க்கில் இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்றதாகவும் அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்து மத கூட்டத்தில் சுவாமி விவேகானந்தர் வரலாற்றுச்சிறப்பு மிக்க உரையாற்றியதாகவும் குறிப்பிட்டார். 1893ஆம் ஆண்டில் விவேகானந்தர் ஆற்றிய உரை இந்தியர்களின் மாண்புகளை உலகிற்கு எடுத்துரைத்ததாக பிரதமர் தெரிவித்தார். கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பின்பு இந்திய பொருளாதாரம் முன்னை விட வலிமையாக மீண்டெழுந்துள்ளதாகவும் பிரதமர் மோடி பேசினார்.