இந்தியா

"கொரோனாவுக்கு முன் - கொரோனாவுக்கு பின் என்றே இனிவரும் காலம் பேசும்" - பிரதமர் மோடி

"கொரோனாவுக்கு முன் - கொரோனாவுக்கு பின் என்றே இனிவரும் காலம் பேசும்" - பிரதமர் மோடி

நிவேதா ஜெகராஜா

பிரதமர் மோடி காணொளி வாயிலாக இன்று நடைபெற்ற சந்திப்பில் பேசும்போது, கொரோனாவிலிருந்து இந்த உலகம் மீண்டபிறகு, 'இதற்கு முன்பு இருந்த இயல்பு அப்படியே நீடிக்காது' எனக்கூறியிருக்கிறார். இந்தக் காணொளி கலந்தாய்வை, புத்த பூர்னிமா நிகழ்வையொட்டி இன்றையதினம் மத்திய கலாச்சார அமைச்சகம், சர்வதேச புத்த கூட்டமைப்பினருடன் இணைந்து நடத்தியுள்ளது.

இதில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு பின் – கொரோனாவுக்குப் முன் என்றே நிகழ்வுகள் அனைத்தையும் நாம் வழங்க வேண்டியிருக்கும். அந்தளவுக்கு மோசமான தாக்கங்களை ஏற்ப” எனக்கூறியிருக்கிறார்.

புத்த பூர்னிமாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த காணொளி சந்திப்பில் பேசிய மோடி “நம் முன்கள பணியாளர்கள் அனைவரும், ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் உயிரை பணயம் வைக்கின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில் பணியாற்றி, கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு, எனது இரங்கல்கள்.

கொரோனாவை எதிர்க்க உதவும் தடுப்பூசிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளை நினைத்து, இந்த நாடு மிகவும் பெருமைப்படுகிறது. கடந்த ஆண்டைவிடவும், இந்த ஆண்டு கொரோனா பற்றிய புரிதலும், அதை தடுக்கும் வழிமுறைகளும் அதிகம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு பல தனிநபர்களும், தன்னார்வு அமைப்புகளும் கொரோனாவை கட்டுப்படுத்த முன்வந்தன. அவற்றில் முக்கியமானவர்களாக இருப்பது, புத்த தர்மத்தை பின்பற்றும் உலகளாவிய மக்கள். பல புத்த நிறுவனங்கள், இந்தப் பேரிடரை சமாளிக்க நமக்கு உபகரணங்கள் கொடுத்து உதவியுள்ளன.

கடந்த ஆண்டு புத்த பூர்னிமாவின்போதும் இவற்றையெல்லாம் நாம் குறிப்பிட்டோம். அப்போதும் கொரோனாவோடுதான் நாம் போராடினோம். இப்போது நிலைமையில் சில மாற்றங்கள் தெரிந்தாலும், நிறைய தொடர்ச்சிகள் இருக்கின்றன.

இந்தப் பெருந்தொற்றுப் பேரிடர் நம்மைவிட்டு இன்னும் அகலவில்லை. இந்தியாவை போல பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக இருக்கின்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் இப்படியொரு கொடிய நோயை சந்தித்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில், கொரோனாவுக்குப் பின் – கொரோனாவுக்கு முன் என்றே அனைத்து நிகழ்வுகளும் வழங்கப்படும். அந்தளவுக்கான பாதிப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.