இந்தியா

“ஆட்டோமொபைல் சரிவா ? அப்பறம் ஏன் ரோட்ல டிராபிக் ஆகுது ?” : பாஜக எம்பி வீரேந்தரா சிங்

“ஆட்டோமொபைல் சரிவா ? அப்பறம் ஏன் ரோட்ல டிராபிக் ஆகுது ?” : பாஜக எம்பி வீரேந்தரா சிங்

webteam

ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருப்பதாக கூறினால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல்கள் இருக்கிறது? என்று பாஜக எம்பி வீரேந்திரா சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுவதாக பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆட்டோ மொபைல் துறையில் அதிக அளவு சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனால், வேலையிழப்பும் அதிக அளவில் இருந்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. மத்திய அரசு பொருளாதார மந்த நிலையை ஓரளவுக்கு ஒப்புக்கொண்டு, அதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வந்தது.

இந்நிலையில், பொருளாதார மந்த நிலை குறித்து மக்களவையில் இன்று பேசிய பாஜக எம்பி வீரேந்திர சிங் மஸ்ட், “நாட்டினையும், அரசாங்கத்தையும் அவமானப்படுத்துவதற்காக சிலர் ஆட்டோ மொபைல் துறையில் மந்த நிலை நிலவுவதாக கூறுகின்றனர். அப்படி ஆட்டோ மொபைல் துறையில் ஏதேனும் சரிவு இருந்தால், எப்படி சாலைகளில் இத்தனை போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.