இந்தியா

சர்க்கஸ் நடத்துகிறீர்களா? அரசை நடத்துகிறீர்களா? - நிர்மலா சீதாராமனை சாடும் காங்கிரஸ்

சர்க்கஸ் நடத்துகிறீர்களா? அரசை நடத்துகிறீர்களா? - நிர்மலா சீதாராமனை சாடும் காங்கிரஸ்

Veeramani

நீங்கள் அரசை நடத்துகிறீர்களா அல்லது சர்க்கஸ் நடத்துகிறீர்களா என சிறுசேமிப்பு வட்டிக்குறைப்பு விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் கட்சி விமரிசித்துள்ளது.

சிறுசேமிப்புகளுக்கான வட்டி 1.1% வரை குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று இரவு அறிவித்த நிலையில் அந்த அறிவிப்பு இன்று காலை வாபஸ் பெறப்பட்டது. தனது கவனத்திற்கு வராமல் வெளியிடப்பட்ட அறிவிப்பு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் அறிவிப்பை கவனக்குறைவாக வெளியிட்டதற்காக அரசை கண்டித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, நீங்கள் நடத்துவது அரசா அல்லது சர்க்கஸா என கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற குளறுபடிகளை செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனியும் தொடர்வதற்கு தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து அரசை ட்விட்டர் மூலம் சாடியள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அரசின் வாபஸ் அறிவிப்பு தேர்தலை மனதில் கொண்டு எடுக்கப்பட்டதா என வினவியுள்ளார்.