இந்தியா

விபத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகை.. விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் ட்வீட்..!

jagadeesh

விபத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகை ஷபனா ஆஷ்மி,‌ விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவுக்கு நடிகை ஷபனா ஆஷ்மி, ‌காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காஹல்பூர் என்ற இடத்தில் முன்னே சென்ற லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. உடனே அவர் மீட்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்தியதாக கார் ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து‌ விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஷபனா ஆஷ்மியின் உடல் நிலை சீ‌ராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஷபனா ஆஷ்மி விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.