இந்தியா

’கோழைத்தனம்...’: சக காவலர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த 3 போலீசார் டிஸ்மிஸ்!

’கோழைத்தனம்...’: சக காவலர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த 3 போலீசார் டிஸ்மிஸ்!

webteam

காவலர் ஒருவரை கும்பல் தாக்கிய போது அதை வேடிக்கை பார்த்த 3 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநில போதை தடுப்பு பிரிவினர், அமிர்தசரஸில் ஒரு வீட்டில் சோதனையிட சென்றனர். பல்தேவ் சிங் என்ற உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்கள் அங்கு சென்றிருந்தனர். அந்த வீட்டில் இருந்த போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சுமார் 20, 25 பேர் பல்தேவ் சிங்கை சரமாரியாகத் தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதை மற்ற காவலர்கள் தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். பின்னர் கூடுதல் படையினர் சென்று அவரை மீட்டுள் ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பின்னர் அந்த கும்பல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வீடியோவை பார்த்த மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங், ‘’தங்களது உயரதிகாரி தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த காவலர்களின் செயல் கோழைத்தனமானது. இது ஏற்க முடியாதது’’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து வேடிக்கை பாரத்த காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.